ரயில் நிலைய நுழைவாயிலில் கால்நடைகள் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர் : கரூர் ரயில் நிலைய வளாக நுழைவு பகுதியில் கால்நடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.கரூர் ரயில் நிலையத்தின் வழியாக தினமும் 40க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து சென்று வருகின்றனர். பயணிகளை ஏற்றி விடவும், இறக்கி விடவும் ஏராளமான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த பகுதியை சேர்ந்தவர்களால் வளர்க்கப்படும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் அதிகாலை நேரத்தில் ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்வதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலையும், இதன் காரணமாக அவ்வப்போது விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்திட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>