சித்தையன்கோட்டையில் கழிவுநீர் வாறுகால்களில் தூர்வாரும் பணி

சின்னாளபட்டி :  சித்தையன்கோட்டை பேரூராட்சியில் கழிவுநீர் வாறுகால்களில் தூர்வாரும் பணியை செயல் அலுவலர் கோபிநாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரும் பணி நடப்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் மழை காலங்களில் மழைநீர் தேங்காமல் குளங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு செல்லும் வகையில், கழிவுநீர் வாறுகால்கள், நீர்வரத்து வாய்க்கால்கள் கடந்த 20ம் தேதி முதல் இன்று வரை தூர்வாரப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் கலெக்டர் உத்தரவின்பேரில் சித்தையன்கோட்டை பேரூராட்சியில் உள்ள அனைத்து கழிவுநீர் வாறுகால்களும் தூர்வாரப்பட்டு வருகின்றன. இப்பணியை செயல் அலுவலர் கோபிநாத் நேற்று ஆய்வு செய்தார். அப்போது தூய்மைப்பணி மேற்பார்வையாளர் விஜயா, அலுவலகப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>