90 வயதில் கார் ஓட்டிய மூதாட்டி...ஆசைகளை நிறைவேற்ற வயது வரம்பு இல்லை என பாராட்டிய ம.பி. முதல்வர்!!

போபால் : மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் 90 வயதான மூதாட்டி ஒருவர் கார் ஓட்டி பழகும் வீடியோ வெளியாகி உள்ளது. பிலாவாலி நகரத்தைச் சேர்ந்த ரேஷாம் பாய் என்ற மூதாட்டி கார் ஓட்ட கற்றுக் கொண்டார். தனக்கு வாகனங்களை இயக்குவது மிக்வும் பிடிக்கும் என கூறிய அவர், தனது குடும்பத்தில் அனைவருக்கும் கார் ஓட்ட தெரியும் எனவும் தனக்கு மட்டும் தெரியாததால் அதனை கற்றுக் கொண்டேன் எனவும் தெரிவித்தார். கார்கள் மட்டுமல்ல டிராக்டர்களையும் ஓட்டுவேன் என்றும் அந்த மூதாட்டி கூறியுள்ளார்.

வயதான காலத்திலும் கார் ஓட்ட கற்று கொண்ட மூதாட்டிக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆசைகளை நிறைவேற்ற வயது வரம்பு இல்லை என்பதை மூதாட்டி உணர்த்தியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச முதல்வர் இணையத்தில் பகிர்ந்து கொண்டதை அடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தள பக்கங்களில் ட்ரெண்ட் ஆகியது. பலர் இந்த வீடியோவை தங்களது சொந்த இணைய பக்கங்களில் பதிவிட்டனர். அதேநேரம் 90 வயது உடைய பாட்டி காரை பொது சாலையில் இயக்கியதற்கு சிலர் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>