கம்பம் பகுதியில் முதல் போக நெல் அறுவடை தீவிரம்

கம்பம் : கம்பம் பகுதியில் முதல் போக நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.தேனி மாவட்டத்தில் கூடலூர் தொடங்கி வீரபாண்டி வரை 14 ஆயிரத்து 700 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. இந்தாண்டு ஜூன் முதல் தேதி தமிழக அரசு பெரியாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு விவசாயத்துக்காக தண்ணீர் திறந்து விட்டது. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையாலும், குறிப்பிட்ட நேரத்தில் பெரியாறு அணையில் நீர் திறந்து விட்டதாலும், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பயிரிடப்பட்ட நெல் அமோகமாக விளைந்துள்ளது.இதனால், கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் அறுவடை தொடங்கி உள்ளது. தொடர்ந்து பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 1,400 கன அடி நீர் பாசனத்துக்காக திறக்கப்படுகிறது. இதனால், முதல் போக சாகுபடி அறுவடை முடிந்ததும், இரண்டாம் போக சாகுபடிக்கு தயாராக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>