சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

ஷார்ஜா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவரில் 157 ரன் எடுத்து வெற்றி பெற்றது.ஷார்ஜாவில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆர்சிபி தொடக்க வீரர்களாக கேப்டன் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.2 ஓவரில் 111 ரன் சேர்த்தது.கோஹ்லி 53 ரன் (41 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பிராவோ பந்துவீச்சில் ஜடேஜா வசம் பிடிபட்டார். டி வில்லியர்ஸ் 12 ரன், படிக்கல் 70 ரன் (50 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஷர்துல் தாகூர் வீசிய 17வது ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். டிம் டேவிட் 1, மேக்ஸ்வெல் 11, ஹர்ஷல் படேல் 3 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன் குவித்தது. வனிந்து ஹசரங்கா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி பந்துவீச்சில் டுவைன் பிராவோ 4 ஓவரில் 24 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஷர்துல் 2, தீபக் சாஹர் 1 விக்கெட் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 157 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. இதில் சிஎஸ்கே தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இதில் கெயிக்வாட் 38, அம்பத்தி ராயுடு  32  ஆகியோர் ரன் எடுத்தனர். இறுதியில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழந்து 157 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories:

>