2வது முறையாக ஜனாதிபதிக்கு கண்புரை ஆபரேஷன்

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு (75), அவரின் 2 கண்களிலும் புரை நோய் தாக்கி இருந்தது. டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சமீபத்தில் அவருக்கு ஒரு கண்ணில் இருந்த புரை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், மற்றொரு கண்ணில் இருந்த புரையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை, இதே மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஜனாதிபதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>