பாகம்பரி மடாதிபதி மஹந்த் மர்ம சாவு சிபிஐ விசாரணை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள பிரசித்தி பெற்ற பாகம்பரி மடத்தின் மடாதிபதியும், அகில பாரதிய அகாரா பரிஷத் எனும் மிகப்பெரிய துறவிகள் அமைப்பின் தலைவருமான மஹந்த் நரேந்திர கிரி, கடந்த திங்கட்கிழமை மடத்தில் உள்ள தனது அறையில் தூக்கில் சடலமாக கிடந்தார். தனது சீடர்களில் ஒருவரான ஆனந்த் கிரி, தன்னை மிரட்ட திட்டம் தீட்டியிருப்பதால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

இது தொடர்பாக, ஆனந்த் கிரி உட்பட 3 சீடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தற்கொலையா? கொலையா? என்பது பற்றி விசாரிக்க உபி காவல்துறை, சிறப்பு தனிப்படை அமைத்துள்ளது. இருப்பினும், இவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உபி அரசு பரிந்துரை செய்தது. இந்நிலையில், மஹந்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்துவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

Related Stories:

>