நடப்பு நிதியாண்டில் இதுவரை நேரடி வரி வருவாய் ரூ.5.7 லட்சம் கோடி: 74% அதிகரிப்பு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வருவாய் 74 சதவீதம் அதிகரித்து, ரூ.5.7 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது.  நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கடந்த 22ம் தேதி வரை வசூலான நேரடி வரி வருவாய் விவரங்களை, மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி மேற்கண்ட காலக்கட்டத்தில் நேரடி வரியாக ரூ.5,70,568 கோடி வசூல் ஆகியுள்ளது. இத மந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் வசூலான 3.27 லட்சம் கோடியை விட 74.4 சதவீதம் அதிகம். இதுபோல் 2019-20 நிதியாண்டில் வசூலானதை விட 27 சதவீதம் அதிகம்.

  மொத்த நேரடி வரி வசூல் நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.6.45 lakh கோடி வசூலாகியுள்ளது. இது 47 சதவீத உயர்வாகும். இதுபோல் 2019-20 நிதியாண்டை விட 16.75 சதவீதம் அதிகம். வரி வசூலில் பெரும்பாலானவை முன்கூட்டிய வரி மற்றும் டிடிஎஸ் மூலம் கிடைத்துள்ளது. அதாவது முன்கூட்டிய வரி வருவாயாக ரூ.2.53 லட்சம் கோடி. சுய மதிப்பீடு வரி வசூல் ரூ.41,739 கோடியாக உள்ளது.

 இதுபோல் நடப்பு நிதியாண்டின் முதல் மற்றும் 2ம் அரையாண்டுக்கான முன்கூட்டிய வரி வசூல் ரூ.2,53,353 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 56 சதவீதம் அதிகம். முன்கூட்டிய வரி வசூலில், தனிநபர் வரி வசூல் ரூ.56,389 கோடி. நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.75,111 கோடி ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>