நாட்டு நலப் பணியில் சிறப்பான சேவை தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு விருது: ஜனாதிபதி வழங்கினார்

புதுடெல்லி: கடந்த 2019-20ம் ஆண்டுக்கான நாட்டு நலப் பணித் திட்ட விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி மூலமாக நேற்று வழங்கினார். இதில், தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு விருது வழங்கப்பட்டது. நாட்டு நலப் பணியில் சிறந்த அதிகாரிக்கான விருது தூத்துக்குடியில் உள்ள காமராஜர் கல்லூரியின் பேராசிரியர் தேவராஜுக்கும், சிறந்த தன்னார்வலர்களுக்கான விருது சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மாணவர் அய்யனாருக்கும், ஜெருசலேம் பொறியியல் கல்லூரியின் மாணவர் நிதிஷுக்கும் வழங்கப்பட்டது.

Related Stories:

>