வென்றால் தான் மக்கள் செல்வாக்கு பெற முடியும்: எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

நெல்லை: நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: தேர்தலை கண்டு அஞ்சுகிற இயக்கமல்ல அதிமுக. எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கியபோது எழுந்த எதிர்ப்புகள் ஏராளம். தொண்டர்கள் துணையோடு எம்ஜிஆர் அவற்றை எதிர்கொண்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் எவ்வளவோ பிரச்னைகளை எதிர்கொண்டு ஆட்சி நடத்தி காட்டினார்.

இப்போது உள்ளாட்சி தேர்தலை நாம் எதிர்கொள்ளும் நிலையில், அதற்கும் தயார் நிலையில் உள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால்தான் மக்களிடம் செல்வாக்கு பெற  முடியும். எனவே  வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும். இதில் வெற்றி பெற்றால்தான் கட்சி வலுப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>