ஒன்றிய அரசு அனுப்பியது தமிழ்நாட்டிற்கு மேலும் 8 லட்சம் டோஸ் தடுப்பூசி

சென்னை: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, ஒன்றிய அரசிடம் அதிக தடுப்பூசிகள் அனுப்பும்படி கோரிக்கை வைத்துள்ளது. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்து குடோனில் இருந்து 7 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 59  பார்சல்கள்  நேற்று பகல் 12.10  மணிக்கு புனேவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தன.

இதேபோல், நேற்று பகல் 11.50 மணிக்கு அகமதாபாத்திலிருந்து ஐதராபாத் வழியாக  இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் 75,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தது. நேற்று ஒரேநாளில் தமிழ்நாடு அரசுக்கு 7,75,000 டோஸ் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளது.

Related Stories:

>