தொழில் முனைவோர்களுக்கு 3 நாட்கள் இணையவழி பயிற்சி: அரசு அறிவிப்பு

சென்னை: தொழில் வணிக மாதிரி   வடிவம் மற்றும் திட்ட அறிக்கை  தயாரிப்பு குறித்து தொழில் முனைவோர்களுக்கு 3 நாட்கள் இணையவழி பயிற்சி நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் www.editn.in (தமிழ்நாடு அரசின் தன்னாட்சி நிறுவனம்) சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. தொழில்முனைவோர்களுக்காக ‘தொழில் வணிக மாதிரி   வடிவம் மற்றும் திட்ட அறிக்கை  தயாரிப்பு’ குறித்த இணைய

வழி கருத்தரங்கம் பற்றிய 3 நாட்கள் (அரை நாள்) பயிற்சி வரும்  29ம் தேதி முதல் 1.10.2021 வரை காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை  நடைபெற   உள்ளதால்,   தொழில்  முனைவோர்கள்,  வருகை  தந்து  பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்பயிற்சி  பற்றிய  கூடுதல்  விவரங்களை  பெற  விரும்புவோர்  அலுவலக  வேலை  நாட்களில (திங்கள் முதல் வெள்ளி வரை)     காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,   கிண்டி   சிட்கோ தொழிற்பேட்டை,  பார்த்தசாரதி கோயில் தெரு,   ஈக்காட்டுதாங்கல்,  சென்னை - 600 032. 86681 02600, 94445 57654 044  -22252081, 22252082  (www.editn.in)ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>