×

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு: இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை..!

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடக்கும் குவாட் உச்சி மாநாடு, ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார். அங்கு, அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், அவர்களுடன் நடந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்றார். அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சென்று சந்தித்து பேசினார்.

சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர். இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். ஜோ பைடன் அமெரிக்க அதிபர் ஆன பிறகு முதல்முறையாக நெரித்து சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி. அப்போது துணை அதிபர் கமலா ஹாரிசும் உடனிருந்தார்.முன்னதாக வெள்ளை மாளிகை முன்பாக மோடியை வரவேற்க இந்தியர்கள் திரண்டிருந்தனர்.


Tags : PM ,Modi ,US President ,Joe Biden , PM Modi meets US President Joe Biden: Consultation on strengthening bilateral ties ..!
× RELATED பிரதமர் பதவியில் இருந்து கொண்டு...