கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நிறைவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 தளங்களிலும் கடந்த பிப். 13ம் தேதி 7ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின.  செப்டம்பர் கடைசி வரை பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன. எனவே 3 தளங்களையும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கீழடியில் வீடியோ, புகைப்படம் எடுக்கும் பணிகள் முடிந்து விட்டதால் அகழாய்வு தளங்களில் உள்ள 8 குழிகளும் தார்ப்பாய் வைத்து மூடப்பட்டுள்ளன.

தொல்லியலாளர்கள் கூறுகையில், ‘‘கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் தலா 8 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து முடிந்துள்ளன. மூன்று தளங்களிலும் உறைகிணறுகள், வெள்ளி முத்திரை நாணயம், மூடியுடன் கூடிய பானை, சிவப்பு நிற பானை, தாழிகள், பொம்மைகள் உள்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன’’ என்றனர்.

Related Stories: