சிறுமிக்கு திருமணம்: 7 பேர் மீது வழக்கு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கும் உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த முருகன்(25) என்பவருக்கும் மணமகன் வீட்டில் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட சமூக நல அலுவலக அதிகாரிகள், திருமணமான சிறுமியை மீட்டு மீண்டும் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

புகாரின்பேரில், சிறுமியின் தாய் லட்சுமி(40), தந்தை தருமன்(45), அண்ணன் சூரியா(25), மணமகன் முருகன்(25), அவரது தந்தை சங்கர்(45), அத்தை சித்ரா(55), மாமா காமராஜ்(65) ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>