மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு: அம்மாநில அரசு அறிவிப்பு..!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மகாராஷ்டிரா மாநில டிஜிபி சஞ்சய் பாண்டே வெளியிட்டுள்ளார். பெண் போலீசார்கள் 24 மணி நேரமும் மக்கள் சேவையாற்றும் தகுதி பெற்றவர்கள். இருந்தாலும், அவர்களுக்கும் மற்றவர்களைப் போல பணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சாதாரண பணியாளர்களுக்கு போல அவர்களுக்கு 8 மணி நேரப்பணி கிடையாது.

மேலு, குறைந்தது 8 மணி நேரம் முதல் அதிகப்படியாக 16மணி நேரம் வரை பணியாற்ற பணிக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் 24மணிநேரமும் பணியாற்றும் சூழ்நிலையும் உருவாகி விடுகிறது. பொதுவாக தினசரி 12 மணி நேரம் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், காவல்துறையினருக்கும் பணி நேரத்தை வரையறுக்க வேண்டும் என நாடு முழுவதும் காவல்துறையினர் மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மராட்டியத்தில் பெண் போலீசாருக்கு பணி நேரம் குறைக்கப்பட உள்ளதாக மாநில காவல்துறை டிஜிபி சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது: மராட்டிய  மாநிலத்தில் பெண் போலீசாரின் பணி நேரத்தை 12 மணிநேரத்திலிருந்து 8 மணிநேரமாக குறைக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இந்த மாற்றப்பட்ட பணிநேரமானது விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறினார். காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே அறிவிப்பால் பெண் போலீசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>