நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் உள்ள கல்குவாரி இயங்க சார்ஆட்சியர் தடை..!!

நெல்லை: ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் உள்ள கல் குவாரி இயங்க சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி தடை விதித்துள்ளார். கல்குவாரி வெடிவிபத்தில் அருகில் இருந்த வீடு இடிந்து 3 வயது குழந்தை இறந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. விதிமீறல் குறித்து ஆய்வு செய்த சார் ஆட்சியர் விசாரணை முடியும் வரை கல்குவாரிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். வெடிவிபத்து குறித்து கல்குவாரி உரிமையாளர் செப்டம்பர் 20ல் நேரில் ஆஜராகி விளக்கம் தர சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories:

>