திருவண்ணாமலை நகராட்சியில் மழைநீர் வடிகால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி-அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை நகராட்சியில் மழைநீர் வடிகால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

வடகிழக்கு பருவமழை காலம் தீவிரமடையும் முன்பு, தமிழகம் முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரி சீரமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் மூலம், மழை வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்வதையும், சாலைகள் சேதமடைவதையும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் சீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் சிறப்பு பணி முகாம்கள் நடத்தப்படுகிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 20ம் தேதி தொடங்கி நாளை (25ம் தேதி) வரை மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு பணி நடக்கிறது. இந்த பணியில் உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை நகராட்சியில் காந்தி நகர், கீழ்நாத்தூர், தவசிகுளம், ராமலிங்கனார் தெரு, குன்றக்குடி நகர், திருவள்ளுவர் நகர், நாவக்கரை, சகாய நகர், வேட்டவலம் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு பணி நடந்தது.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தூய்மை அருணை ஒருங்கிணைந்து காந்தி நகர் பகுதியில் நேற்று நடந்த மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் பா.முருகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்து, சீரமைப்பு பணியிலும் ஈடுபட்டனர்.அதில், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ மு.ெப.கிரி, முன்னாள் நகராட்சி தலைவர் எ.வ.வே.கம்பன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல்ராஜன், ேகாட்ட பொறியாளர் முரளி, நகராட்சி ஆணையர் சந்திரா, ஆர்டிஓ வெற்றிவேல், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திவேல்மாறன், பிரியா விஜயரங்கன், அருணை வெங்கட், டிவிஎம் நேரு, காலேஜ் ரவி, குட்டி புகழேந்தி, டி.எஸ்.ஆர்.ராம்காந்த், ஏ.ஏ.ஆறுமுகம், பா.ஷெரீப், ராஜாங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும், திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகளிலும் நகராட்சி பணியாளர்களுடன் இணைந்து தூய்மை அருணை தன்னார்வலர்கள் 500க்கும் மேற்பட்டோர் மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு பணியில் ஈடபட்டனர்.

Related Stories: