வடகிழக்கு பருவமழை குறித்து ஆலோசனை: முன்னதாகவே ஏரிகள், நீர் நிலைகளை தூர்வார முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு..!!

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தென்மேற்கு பருவமழை காலம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது. அதனால் ஏறத்தாழ 40% மேல் மழைப்பொழிவை தரும். அதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தாழ்வு மண்டலம் அல்லது புயல்கள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன.

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக ஏரிகள், நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள் தூர்வாரப்படுகின்றன. மேலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால்களை ஒழுங்குபடுத்தும் பணி நடைபெறுகிறது.  இந்நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிதாவது: பருவ மழையால் மக்கள் யாரும் பாதிக்கப்படாத வகையில் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். நகரம் மற்றும் கிராமங்களில் குடிநீர், சாலைவசதி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, பருவ கால சவால்களை திறம்பட கையாள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், நீர்நிலை உள்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக் கட்டுகளின் கதவுகள், கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மரங்கள் சாய்ந்து விழுந்தால், அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த தீயணைப்புத்துறை, வருவாய் துறையினருக்கு தேவையான கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவையென்றால் மாவட்ட நிர்வாகம் கேட்டு பெற வேண்டும். வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர் நிலைகள், நீர்வழித்தடங்கள், ஆறுகள் உள்ளிட்டவைகளை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>