கொல்கத்தா அபார வெற்றி

அபுதாபி: பலம் வாய்ந்த மும்பை இந்தியன் அணியை 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அபுதாபியில் நடந்த ஐபிஎல் ெதாடரின் 34வது ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 155 ரன் எடுத்தது. அதற்கு அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

சுப்மன்கில் 13 ரன்னில் பும்ரா பந்தில் போல்ட் ஆனார். எனினும் கொல்கத்தாவின் ரன் வேட்டை தொடர்ந்தது. இந்நிலையில் வெங்கடேஷ், 53 ரன் (33 பந்து) எடுத்து பும்ரா பந்தில் அவுட் ஆனார். எனினும் திரிபாதி 74 (42 பந்து) எடுத்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். வின்னிங் ஷாட்டை ரானா பவுண்டரி அடித்து முடித்து வைத்தார். இறுதியில் கொல்கத்தா அணி 159 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories:

>