துளித்துளியாய்...

* துரந்த் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த முதல் காலிறுதியில்  எஸ்சி முகமதன்  1-0 என்ற கோல் கணக்கில், நடப்பு சாம்பியன் கோகுலம் கேரளா எப்சி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

* கிரிக்கெட் விளையாட பாதுகாப்பான நாடு என்று பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது, ஆனாலும் அங்கு விளையாட மாட்டோம் என்று சொல்லும் வீரர்கள், இந்தியாவில் விளையாட மாட்டோம் என்று சொல்ல மாட்டார்கள். காரணம் பணம் ’ என்று  பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட, முன்னாள் ஆஸி வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

* இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில்  செல்சீ அணிக்காக விளையாடும்  ரொமேலு லூகாகு, ‘போட்டிக்கு முன்னதாக முழுங்காலிட்டு உறுதி மொழி ஏற்பதால்  கால்பந்தில் இனவெறியை ஒழிக்க முடியாது.  நிர்வாகங்கள், வீரர்களின் உறுதியான நடவடிக்கைகள் மூலம் தான் இனவெறியை ஒழிக்க முடியும் ’என்று கூறியுள்ளார்.

Related Stories:

>