நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் குறையும்: ராமதாஸ் அறிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: மோசடிகளின் கூடாரமாக நீட் உருவெடுத்திருப்பது தேர்வு சார்ந்த மோசடிகள் அதிகரிக்கவும், மருத்துவக் கல்வியின் தரம் குறையவும் தான் வழி வகுக்கும். எனவே, நடப்பாண்டு முதலே நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதன் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: