கிஷ்கிந்தா வசமுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை மீட்க சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை - சேகர்பாபு

சென்னை: கிஷ்கிந்தா வசமுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை மீட்க சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தாம்பரம் அருகேயுள்ள கிஷ்கிந்தா வசமுள்ள இடம் ஜமீன்தார் ஒழிப்பு சட்டம் மூலம் உருவான நிலம் என்று அமைச்சர் கூறியுள்ளார். சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தி அது கோவில் நிலம் தான் என்று உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆண்டுக்குள் 500 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். பயன்பாட்டில் இல்லாத நகைகள் ஒன்றிய அரசு ஒப்புதலோடு தங்க பிஸ்கட்டுகளாக மாற்றப்படும் என்று தகவல் அளித்துள்ளார். வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டி தொகையில் கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

Related Stories:

>