தாலிபான்கள் கைப்பற்றிய ஆப்கானில் சரிவின் விளிம்பில் சுகாதாரத்துறை!: அவசர உதவி, அடிப்படை சுகாதாரம் கிடைக்காமல் மக்கள் தவிப்பு..WHO வேதனை..!!

ஜெனீவா: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு அந்நாட்டின் சுகாதாரத்துறை சரிவின் விளிம்பில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஆப்கானை கைப்பற்றிய தொடக்கத்தில் நல்ல ஆட்சியை மக்களுக்கு வழங்குவோம் என தெரிவித்த தாலிபான்கள், தற்போது நேர்மாறாக செயல்பட்டு வருகின்றனர். சர்வதேச அரங்கில் தலிபான்கள்  இடம் பெறுவதற்கான பாகிஸ்தான் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.  சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தானின் சிறப்பு தூதர்கள் திடீரென ஆப்கானிஸ்தானை அடைந்து தலிபான் தலைவர்களை சந்தித்துள்ளனர். இந்த சம்வவம் உலக அரங்கில் பெரிதும் கவனிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தற்போதைய சுகாதாரத்துறை நிலை குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதானம், ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்டதால் அந்நாட்டு சுகாதாரத்துறை சீல்குலையும் விளிம்பில் இருப்பதாக தெரிவித்தார். யார் உயிரை காப்பாற்றுவது, யார் உயிரை காப்பாற்றாமல் விடுவது என்று முடிவெடுக்க முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வருவதாக அவர் வேதனை தெரிவித்தார். அந்நாட்டுக்கு போதுமான உதவிகள் இல்லாததால் மிகப்பெரிய சுகாதார திட்டங்கள் கிடப்பில் இருப்பதாக தெரிவித்த அவர், மருந்துகளை வாங்க முடியாமலும், ஊதியம் வழங்க முடியாமலும் சுகாதாரத்துறை ஸ்தம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத்துறையில் ஏற்பட்ட இந்த தடையால் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை சுகாதார வசதிகள், அவசரகால உதவிகள், போலியோ ஒழிப்பு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் முயற்சி போன்றவை ஆப்கானிஸ்தானில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதானம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: