சாலை விரிவாக்கம் - சசிகலா நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து

சென்னை: சென்னை பனையூரில் சாலை விரிவாக்கத்துக்காக சசிகலா நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பனையூரில் சசிகலாவுக்கு சொந்தமான தென்னந்தோப்பு, பழத்தோட்டம் உள்ளது. சற்றுச்சுவர் கட்டி பாதுகாக்கப்பட்டு வரும் பனையூர் நிலத்தின் ஒரு பகுதியை சாலை விரிவாக்கத்துக்கு கையகப்படுத்த முயற்சி நடந்தது. 2010ல் நிலம் கையகப்படுத்தலுக்கான வட்டாட்சியர், நடவடிக்கையை மேற்கொண்டு சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 2011ல் சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், சசிகலா நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்தார்.

Related Stories:

>