எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்ப தடுப்பூசிகளை கர்ப்பிணிகள் செலுத்தும் போது, குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு : ஆய்வில் கண்டுபிடிப்பு!!

சென்னை : எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை கர்ப்பிணிகள் செலுத்தும் போது, குழந்தைகளுக்கும் தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. தடுப்பூசி தயாரிப்பில் இதுவரை இல்லாத எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பைசர், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. கொரோனா வைரஸின் மரபணு சங்கிலியில் உள்ள ஆர்என்ஏ-வில் இருந்து எம்.ஆர்.என்.ஏ. பிரதியை பிரித்து கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.

இவ்வாறு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை கர்ப்பிணிகள் செலுத்தி கொள்ளும் போது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பு திறன் இயல்பாக உருவாகிறது என்று அமெரிக்காவின் மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 36 கர்ப்பிணிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தாய்க்கு மட்டுமின்றி குழந்தைக்கும் எதிர்பார்த்ததை விட அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பது தெரியவந்துள்ளது. அதே சமயம் அமெரிக்காவில் 30% கர்ப்பிணிகள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி இருப்பதாக அந்நாட்டு அரசு அண்மையில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: