பஸ் ஸ்டாண்டில் சேதமடைந்த பாதாள சாக்கடையால் ஆபத்து : சரிசெய்ய கோரிக்கை

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் சேதமடைந்த பாதாள சாக்கடையால் விபத்து அபாயம் நிலவுகிறது. சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு தினமும் 500க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் வந்து செல்கின்றன. பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் பாதாள சாக்கடை செல்கிறது. இப்பாதாள சாக்கடையின் மேல் இரும்பினால் ஆன மூடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மூடி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சேதமடைந்து காணப்படுகிறது.பேருந்து மற்றும் வாகனங்களின் சக்கரங்கள் இந்த பாதாள சாக்கடையின் மேல் ஏறி, இறங்கி செல்வதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. சேதமடைந்த இடத்தில் இரும்பு பேரிகார்டை வைத்து மறைத்துள்ளனர். இதனை உடனடியாக அகற்றிவிட்டு, பாதாள சாக்கடையை நிரந்தரமாக சேதாரம் ஆகாத வகையில் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>