ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து அதற்கான ஆணைகளையும் வழங்கினார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் 25,000 விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 4.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்த நிலையில், முதல்கட்டமாக 1 லட்சம் பேருக்கு மின் இணைப்பு தரப்படுகிறது.

அண்மையில் முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விவசாயிகள் முழுமையான பலன்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விவசாயத்திற்கு என தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. விவசாயிகளுக்கு விரைவில் 1 லட்சம் மின் இணைப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதன்படி பல்வேறு காலக்கட்டங்களில் விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளின் பட்டியல் தயார் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு, மாதத்திற்கு 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கி நான்கு மாதத்திலேயே திட்டத்தை முடிக்க மின்சாரத் துறை திட்டமிட்டுள்ளது.இதில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கு தேர்தல் முடிந்த பிறகே விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>