மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.35,104க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.35,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ரூ.35 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான தங்கம் விலை திடீரென 35 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,371க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.34,968க்கும் விற்பனையானது. நேற்று மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து மீண்டும் ரூ.35,280க்கு விற்பனையானது.

தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இரண்டாம் வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது. அடுத்து வந்த நாட்களிலும் ஓரளவுக்கு தங்கம் விலை குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.35,104 விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 25 குறைந்து ரூ.4,388 க்கு விற்பனையாகிறது.சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.64.80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>