காளையார்கோவிலில் 21 ஆயிரம் தீப்பெட்டிகளில் அப்துல் கலாம் உருவ படம்

காளையார்கோவில் :  காளையார்கோவிலில் 21 ஆயிரம் அடுக்கிய தீப்பெட்டிகளை 2 நிமிடங்கள் 10 நொடிகளில் சரிய வைத்து அப்துல் கலாம் உருவத்தை உருவாக்கி கல்லூரி மாணர்கள் சாதனை படைத்தனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உருவத்தை வித்தியாசமான முறையில் உருவாக்க காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முடிவு செய்தனர்.

நேற்று 49 மாணவர்கள் இணைந்து 21,000 தீப்பெட்டிகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைத்தனர். பிறகு ஒரே ஒரு தீப்பெட்டியை மட்டும் தள்ளிவிட்டு, அனைத்தையும் சரிய வைத்து அப்துல்கலாம் உருவத்தை உருவாக்கினர். தீப்பட்டிகள் சரிய 2 நிமிடங்கள் 10 வினாடிகள் ஆகின. மாணவர்கள் இதற்காக 6 மாதங்கள் பயிற்சி பெற்றனர். மேலும் இச்சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மைக்கேல் கல்லூரிகளின் தலைவர் ஸ்டாலின் ஆரோக்யராஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கற்பகம், சோழன் உலக சாதனை புத்தக நிறுவுனர் நிமலன் நீலமேகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாதனை படைத்த மாணவர்களை அனைவரும் பாராட்டினர்.

Related Stories:

>