விமானத்தில் வந்த வாலிபர் கடத்தல்?

மீனம்பாக்கம்: சிவகங்கையை சேர்ந்தவர் முத்து சீமான் (25). கடந்த 2 ஆண்டுகளாக சார்ஜாவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்தார். ஒப்பந்தக்காலம் முடிவடைந்ததால் கடந்த 17ம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர் சிவகங்கையில் உள்ள தந்தைக்கு போனில் பேசியுள்ளார். ஆனால் மறுநாள் வரை வீட்டுக்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர்.

அவரது போனுக்கு பேசியபோது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதுகுறித்து சென்னை விமானநிலைய போலீசில் புகார் கொடுத்தனர். அதன்படி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>