சீர்காழியில் குழந்தை சிசு நரபலி?

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றில் திருக்கோலக்கா கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர், நேற்று வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது வலையில் பெரிய மீன் சிக்கி விட்டதாக நினைத்து வலையை ஆனந்தராஜ் கரைக்கு எடுத்து வந்து பார்த்துள்ளார். அப்போது வலையில் பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் ஒரு பொருள் அடைக்கப்பட்டு இருந்துள்ளது. டப்பாவைத் திறந்து அந்த பொருளை வெளியே எடுத்தபோது, அது குழந்தை சிசு போல் தெரிய வந்தது. அந்த டப்பாவில் மாந்திரீகம் செய்ததற்கான பொருட்களும் இருந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சீர்காழி போலீசார் மாந்திரீகம் தெரிந்தவர்கள், குழந்தை சிசுவை நரபலி கொடுத்து ஆற்றில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>