தர்மபுரி ராணுவ வீரர் ஜார்க்கண்டில் மரணம்

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ஈபி காலனியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சங்கர் (32). ஜார்க்கண்ட் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலா. இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை ராணுவ முகாமில் உடற்பயிற்சியில் ஈடு்பட்டிருந்த சங்கர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று  விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்து, ராணுவ வாகனத்தில் சொந்த ஊரான மாரண்டஹள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories:

>