ஐநா.வில் காஷ்மீர் பற்றி பேச்சு மீண்டும் சீண்டிய துருக்கி அதிபர்

நியூயார்க்: தொடர்ந்து 2வது முறையாக ஐநா பொதுச்சபை விவாதத்தில் காஷ்மீர் விவகாரத்தை துருக்கி அதிபர் எர்டோகன் கிளப்பியுள்ளார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 193 நாடுகள் பங்கேற்கும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில், சர்வதேச நாடுகளின் பல்வேறு பிரச்னைகள் குறித்த பொது விவாதத்தில், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் நேற்று முன்தினம் பேசுகையில் ‘கடந்த 74 ஆண்டுகளாக நீடித்து  வரும் காஷ்மீர் பிரச்னைக்கு ஐநா தீர்மானங்களுக்கு உட்பட்டு, சம்பந்தப்பட்ட நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் துருக்கி உறுதியாக இருக்கிறது,’ என்றார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, ‘இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது, மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்றுக் கொள்ள வேண்டும். மேலும், தனது சொந்த கொள்கைகளை இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளது. இந்தியாவை சீண்டிய அவருக்கு கண்டனம் வலுத்துள்ளது.

Related Stories: