தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கக்கோரி ஒன்றிய அமைச்சரிடம் சக்கரபாணி கோரிக்கை

புதுடெல்லி: இரு தினங்களுக்கு முன் டெல்லி சென்ற தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஒன்றிய பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.5,231 கோடியை உடனடியாக விடுவிக்கும்படி நேற்று முன்தினம் கோரிக்கை வைத்தார். நேற்று அவர் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவாவை சந்தித்து, ‘பழனியில் இருந்து ஈரோடுக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் வழியாக புதிய ரயில் விட வேண்டும்.

திண்டுக்கல் - கம்பம், திண்டுக்கல்- காரைக்குடி புதிய ரயில்கள் விட வேண்டும். கோயம்புத்தூர்- இராமேஸ்வரம், கோயம்புத்தூர்- தூத்துக்குடி, கோயம்புத்தூர்- கொல்லம் ,கோயம்புத்தூர்- மதுரை ஆகிய ரயில்களை மீண்டும் இயக்க உத்தரவிட வேண்டும். பழனி - ஒட்டன்சத்திரம் இடையே மூன்று ரயில் குறுக்குப்பாதைகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும். மதுரை- திருவனந்தபுரம் அமிர்தா துரித வண்டியை ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் கொடைரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்,’ என கோரியுள்ளார்.

Related Stories: