நாடு முழுவதும் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் டெல்லி, ராஞ்சியில் ஆள்மாறாட்டம் செய்து மெகா மோசடி: சி.பி.ஐ. விசாரணையில் அம்பலம்

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் டெல்லி, ராஞ்சியில் ஆள்மாறாட்டம் செய்து மெகா மோசடி செய்தது சி.பி.ஐ. விசாரணையில்  தெரியவந்துள்ளது. டெல்லியில் 2 மாணவர்களிடம் தலா ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்ட நாக்பூர் நீட் பயிற்சி மைய உரிமையாளர்பரிமால்கோட்பல்லிவார் உள்ளிட்ட 4-க்கும் மேற்பட்டோர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாக்பூர் பயிற்சி மைய உரிமையாளர் பரிமால், நீதி தேர்வு விடைத்தாளை திருத்தி அதிக மதிப்பெண் வாங்கி தருவதாக உறுதி அளித்து பணம் வசூலித்துள்ளார். நீட் தேர்வு விடைகளை முன்கூட்டியே மாணவர்களுக்கு அளிப்பதாக கூறி மாணவர்களிடம் பல லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார்.

நாட்டின் புகழ்பெற்ற கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக கூறி மாணவர்களிடம் தலா 50 லட்சம் ரூபாய் வசூலித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாடு முழுதும் நடைபெற்ற மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வில் பல்வேறு மோசடிகள் நடந்ததாக ஏற்கனவே புகார்கள் எழுந்தது. ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் முக கவசத்தில் மைக் வைத்தும், ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது டெல்லி மற்றும் ராஞ்சி நகரில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் பல்வேறு மோசடிகள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த  தனியார் நீட் பயிற்சி மையம் இந்த மோசடியில் ஈடுபட்டதாக எல்லி [போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பயிற்சி மையத்தின் உரிமையாளர் இந்த முறை கேட்டில் மூளையாக செயல்பட்டுள்ளார். நீட் தேர்விற்கு விண்ணப்பித்த வசதி படைத்த மாணவர்களிடம் இருந்து தலா 50 லட்சம் வசூலித்தது தெரியவந்துள்ளது. இதன்படி டெல்லியில் 4 மையத்திலும், ராஞ்சியில் 1 மையத்திலும் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்துள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தொடர்ந்து அம்பலமாகும் நீட் முறைகேடுகள், நீட் தேர்வு தேவையில்லை என்று கூறும் கருத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Related Stories: