நாகாலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அமைத்த ஒன்றியகுழுவில் இருந்து விலகினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: நாகாலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அமைத்த ஒன்றியகுழுவில் இருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விலகினார். பிரிவினைவாத குழுக்களில் முக்கிய குழுவான என்.எஸ்.இ.என்.(ஐசக் முய்வா), ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மத்தியஸ்தர் குழுவின் பொறுப்பில் இருந்து ரவியை நீக்க வேண்டும் என்று என்.எஸ்.இ.என்.(ஐ.எம்.) வலியுறுத்தி வந்தது.

கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் நாகாலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக ஒன்றிய அரசு நியமித்து. நாகாலாந்து மத்தியஸ்தர் பதவியில் ஆர்.என்.ரவி தொடர்வாரா என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் இன்று அவர் அந்த குழுவில் இருந்து விலகினார். என்.எஸ்.இ.என்.(ஐ.எம்.)- ஆர்.என்.ரவி இடையே கருத்துவேறுபாட்டை அடுத்தது பல மாதமாக பிரிவினைவாத குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடக்காமல் இருந்தது

அந்த பேச்சுவார்த்தையை உளவுப்பிரிவின் முன்னாள் சிறப்பு இயக்குனர் அக்சய் மிஸ்ரா தொடர்வார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆயுதக்குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாகாலாந்தில் அமைதி உடன்படிக்கையை  ஆர்.என்.ரவி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories:

>