குத்தகைக்கு விடப்பட்ட கோயில் நிலங்களுக்கு நியாமான வாடகையை நிர்ணயம் செய்யவேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குத்தகைக்கு விடப்பட்ட கோயில் நிலங்களுக்கு நியாமான வாடகையை நிர்ணயம் செய்யவேண்டும் எனஅனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகையை மாற்றியமைக்கவும் அரணியத்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளர் மேல்நிலை பள்ளி அங்குள்ள அறநிலையத்துறையின் கீழ் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலத்திற்கு குத்தகை தொகை நிர்ணயிப்பது தொடர்பாக கோயில் செயல் அலுவலர் கடந்த 2018-ம் ஆண்டு நோட்டிஸ் அனுப்பினார்.

இந்த நோட்டிஸை ரத்து செய்ய வேண்டும் என பள்ளி சார்பாக உயர்நீதிமன்றத்தி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் நோட்டீஸுக்கு பள்ளி நிர்வாகம் அளித்துள்ள ஆட்சியப்பனைகளை விசாரித்து 8 வாரங்களுக்குள் தகுந்த ஒத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு விடும் பொழுது அதற்கு நியாமான வாடகை நிர்ணயிக்க வேண்டும் எனவும், அனைத்து அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வாடகை நிர்ணயம் தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகைகளை மாற்றிஅமைக்கும் நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

Related Stories: