மகப்பேறு கால விடுப்பில் சென்றால், வீட்டு வாடகை படி வழங்கப்படாது : மகளிர் அரசு ஊழியர்களுக்கு ஷாக்கிங் அறிவிப்பு!!

சென்னை : அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை படி வழங்கும் அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2016ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 180 நாட்களிலிருந்து 270 நாட்களாக (9 மாதங்கள்) உயர்த்தி அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டது. இந்த விடுப்பு நாட்களுக்கு முழு சம்பளமும் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. வீட்டு வாடகை படியும் இதில் அடக்கம்.

இந்த சூழலில் மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.அதன்தொடர்ச்சியாக திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும், மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று, அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories: