ஹரியானாவில் 75 ஆண்டுகள் கடந்துள்ள வயதான மரங்களை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.2,500 ஓய்வூதியம் வழங்கப்படும் : முதல்வர் அறிவிப்பு!!

சண்டிகர் : உலக மோட்டார் சவாரி தடுப்பு தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பை வலியறுத்தி ஹரியானா முதல்வர் எம். எல்.கட்டார் மற்றும் அமைச்சர்கள் மிதிவண்டி பயணம் மேற்கொண்டனர். ஐக்கிய நாடுகள் சுற்றுசூழல் திட்டத்தின் படி செப்டம்பர் 22ம் தேதி அன்று ஒருநாள் மட்டும் வாகனங்களை பயன்படுத்தாமல் நடைப்பயணம் மிதிவண்டி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்த தினத்தை கொண்டாடும் வகையில், ஹரியானா தலைநகர் சண்டிகரில் தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் கட்டார் மற்றும் அமைச்சர்கள் மிதிவண்டியில் பயணம் மேற்கொண்டனர். முதல்வர் எம்.எல்.கட்டாருக்கு தலைமைச் செயலகத்தில் பூங்கொத்து கொடுத்து அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் பேசிய அவர், ஹரியானா மாநிலத்தில் 75 ஆண்டுகள் கடந்துள்ள வயதான மரங்களை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.2,500 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறினார். மனித சமூகத்திற்கு உயிர் காக்கும் பிராணவாயு கொடுக்கும் மரங்களை போற்றி பாதுகாக்கவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக கட்டார் கூறினார்.

Related Stories:

>