கருக்கலைப்பு உச்சவரம்பை 24 வாரங்களாக உயர்த்தும் சட்டம் வரும் 24ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது!!!

டெல்லி : நாடாளுமன்றத்தில் இயற்றபட்ட கருக்கலைப்பு சட்டம் வரும் 24ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிப்பாணை வெளியிட்டுள்ளது.1971-ம் ஆண்டு மருத்துவரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை இந்தியா கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் படி 20 வாரங்கள் வரை இருக்கும் கருவை கலைக்கலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.மருத்துவரீதியன காரணங்களுக்காகவும் கருவை சுமக்கும் பெண்ணின் உயிருக்கு ஆபத்தான சூழலிலும், கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் இருந்தாலோ, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் ஏற்பட்ட கர்ப்பமாக இருந்தாலோ 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்யலாம் என இச்சட்டம் கூறுகிறது.

இந்த நிலையில் கர்ப்பம் அடைந்த பெண்களின் 20 வாரங்கள் கருவை கலைக்கலாம் என்ற உச்சவரம்பை 24 வாரங்களாக உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலனுக்காக இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து, கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலையும் இம்மசோதா பெற்று விட்டது. இந்த மசோதாவின்படி, கர்பப்பையில் இருக்கும் கரு 20 வாரங்களுக்குள் இருந்தால் ஒரு மருத்துவரே முடிவு செய்து கருக்கலைப்பு செய்யலாம்.

அதுவே 20 முதல் 24 வாரங்களாக இருந்தால் இரண்டு மருத்துவர்கள் சேர்ந்தே முடிவு செய்ய முடியும்.இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலோடு சட்டமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் மேற்கண்ட கருக்கலைப்பு சட்டம் வரும் 24ம் தேதி  முதல் அமலுக்கு வருவதாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிப்பாணை வெளியிட்டுள்ளது.

Related Stories: