பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: தாய், மகள் பலி

பெங்களூரு: பெங்களூரு பேகூர் சரகத்திற்குட்பட்ட மைகோ லே அவுட்டை அடுத்த தேவரசிக்கனஹள்ளி பகுதியில் 4 மாடிகள் கொண்ட அஸ்திரியா குடியிருப்பு உள்ளது. இதன் 2வது மாடியில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வீட்டிற்குள் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில், மேல் மற்றும் கீழ் தளத்தில் உள்ள  வீடுகளுக்கும் தீ பரவியது. அதில் வசித்தவர்கள். தீயணைப்பு படையினர்  தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நெருப்பு தனல்களில் சிக்கி கொண்டவர்களை பத்திரமாக மீட்டனர். ஆனால், 210வது பிளாட்டில் வசித்து வந்த லட்சுமி தேவி மற்றும் அவரது மகள் இருவரும் சிக்கி தீயில் கருகி உயிரிழந்தனர். 5 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

Related Stories:

>