9 பேர் நன்னடத்தை பிணையில் விடுவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 9 பேர் நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. மேலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டு, திருந்தி வாழ நினைக்கும் குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள எஸ்பி சுதாகர் அறிவுறுத்தினார். இதையொட்டி, சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம், அருட்பெரும்செல்வி தெரு ஜோதி (32), செட்டிகுளம் தெரு, பழனி (40), முனியாண்டி (எ) நொண்டி முனியாண்டி (26), பெருமாள் தெரு அறிவழகன் (59), புதுப்பாளைய தெரு குமார் (30), செங்கழுநீரோடை வீதி சக்தி (எ) சத்தியா (22), காமாட்சி அம்மன் கோயில் சன்னதி தெரு பாபு (எ) கமலஹாசன் (24), சரத் (எ) சரத்குமார் (24), கச்சவேஸ்வரர் நகர் காமராஜ் தெரு தேவா (எ) தேவராஜ் (25) ஆகியோரிடம் இருந்து ஓராண்டுக்கான நன்னடைத்தை பிணையப் பத்திரத்தை பெற்று காஞ்சிபுரம் ஆர்டிஓ வாழ அறிவுறுத்தி ஆணை பிறப்பித்தார்.

Related Stories:

>