திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1 லட்சம் உண்டியல் வசூல்

திருத்தணி: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள், கோயிலில் உள்ள உண்டியலில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி காணிக்கை செலுத்துகின்றனர். பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் உண்டியல் நிரம்பியது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் தரப்பில், உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணும் பணி மலைக்கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அதிகாரிகள் முன்னிலையில் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் ஆகியோர் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.  இதில் மொத்தம் ரூ.1 லட்சம் இருந்தது. இது தவிர தங்கம், வெள்ளி ஆகியவையும் இருந்தது. இவற்றை திருத்தணியில் உள்ள வங்கியில் அதிகாரிகள் டெபாசிட் செய்தனர்.

Related Stories: