×

விமானப்படை புதிய தளபதியாக சவுதாரி நியமனம்

புதுடெல்லி: இந்திய விமானப்படை தளபதியாக உள்ள ஆர்.கே.எஸ்.பதவுரியாவின் பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, விமானப்படையின் புதிய தளபதியாக வி.ஆர்.சவுதாரியை ஒன்றிய அரசு நேற்று நியமித்தது. சவுதாரி தற்போது விமானப்படை துணைத் தளபதியாக பதவி வகித்து வருகிறார். 30ம் தேதியுடன் பதவுரியா ஓய்வு பெற்ற பிறகு, சவுதாரியா புதிய விமானப்படை தளபதியாக பதவியேற்றுக் கொள்வார்.

Tags : Chaudhry , Chaudhry appointed new Commander of the Air Force
× RELATED எதையும் சந்திக்க தயார்: விமானப்படை தளபதி சவுதாரி பேச்சு