×

20 சதவீதம் தள்ளுபடி அறிவிப்பு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.200 கோடி: அனைத்து மண்டல மேலாளர்களுக்கு உத்தரவு

சென்னை: தமிழக அரசின் கைத்தறி நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நாடு முழுவதும் 167 விற்பனை நிலையங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை நிலையங்களில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சிறப்பு விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் அனைத்து பொருட்களும் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு, கைத்தறி சில்க் வகை பொருட்களுக்கு ரூ.1000 வரை 30 சதவீதமும், ரூ.1000க்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு 20 சதவீதமும், ஏற்றுமதி வகை உட்பட கைத்தறி காட்டன் வகை பொருட்களுக்கு ரூ.500 வரை 30 சதவீதமும், ரூ.501க்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு 20 சதவீதமும், விசைத்தறி வகை பொருட்கள் அனைத்து வகையான விலையில் 20 சதவீதம் வரையும், அனைத்து கைத்தறி தள்ளுபடி இல்லா பொருட்கள் அனைத்து வகையிலும் 20 சதவீதம் வரை தள்ளுபடி தர வேண்டும். இது கடந்த 15ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி இருக்கும். இந்தாண்டு ரூ.200 கோடி வருவாய் இலக்கை அடையும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் அலோக் பாப்லே அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கி வந்ததை தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 20 சதவீதமாக குறைத்துள்ளது.

Tags : Co-optex ,Diwali , Co-optex announces 20 per cent discount on Diwali sales target of Rs 200 crore: Order to all regional managers
× RELATED வலங்கைமானில் மூடிக்கிடக்கும் கோஆப்டெக்சை மீண்டும் திறக்க வலியுறுத்தல்