×

வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுகிறது அமீரகத்தில் ஐதராபாத் உற்சாகம்

துபாய்: ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில்,  டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. டெல்லி அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. சென்னை அணியும் 12 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், ரன்ரேட்டில் முன்னிலை வகிப்பதால் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் போட்டி நடந்த வரை டெல்லி அணியே முதல் இடத்தில் இருந்தது. அமீரகத்தில் இன்று தான் முதல் ஆட்டத்தில் களம் காண இருக்கிறது. பன்ட் தலைமையில் தவான், ரகானே, ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அக்சர், ரபாடா, நார்ட்ஜே, இஷாந்த் ஆகியோருடன் நம்ம ஊர் ஆல் ரவுண்டர் அஷ்வினும் அணிக்கு வலு சேர்க்கின்றனர்.

வோக்ஸ் விலகியுள்ள நிலையில், காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது அதை ஈடு செய்யும். திறமையான வீரர்களை கொண்ட ஐதராபாத் அணி,  இந்தியாவில் நடந்த போட்டிகளில் மோசமாக சொதப்பியது. அந்த அணி 7 ஆட்டங்களில் விளையாடி, ஒரே ஒரு வெற்றியுடன் (2 புள்ளி) புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. பல ஆட்டங்களில், நூலிழையில் வெற்றி கை நழுவியது ஐதராபாத்துக்கு பின்னடைவை கொடுத்தது. கேன் வில்லியம்சன் தலைமையியிலான அணியில் அதிரடிக்கு பஞ்சமில்லை. பந்துவீச்சு கூட்டணியும் அமர்க்களமாகவே உள்ளது. அதிர்ஷ்ட தேவதையின் ஆசிர்வாதமும் சேர்ந்தால் சன்ரைசர்ஸ் வெற்றிகளைக் குவிப்பது உறுதி.

* நேருக்கு நேர்...
இரு அணிகளும் மோதிய 19 ஆட்டங்களில் ஐதரபாத் 11-8 என முன்னிலை வகிக்கிறது. அதிகபட்சமாக ஐதராபாத் 219 ரன், டெல்லி189 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக ஐதராபாத் 116 ரன்னிலும், டெல்லி 80 ரன்னிலும் சுருண்டுள்ளன.
நடப்புத் தொடரில்  ஏப்.25ல் மோதிய 20வது லீக் ஆட்டம் சரிசமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டதில்  டெல்லி வெற்றியை வசப்படுத்தியது. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில்,  டெல்லி 3-2 என முன்னிலை வகிக்கிறது.


Tags : Hyderabad ,United States , Hyderabad enthusiasm in the United States draws with success
× RELATED மோசமான வானிலை.! ஐதராபாத் விமானம் தாமதம்: பயணிகள் அவதி