×

சில்லி பாய்ண்ட்...

* ஐபிஎல் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைமை செயலதிகாரி ஹமித் ஷின்வாரியும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
* மெட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், முழங்கால் மூட்டு காயம் காரணமாக மெஸ்ஸி விளையாட மாட்டார் என பிஎஸ்ஜி அணி அறிவித்துள்ளது.
* டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவது என்ற கோஹ்லியின் முடிவுக்கு டேல் ஸ்டெயின், பார்திவ் படேல் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
* 2021-2022 சீசனில், இந்திய அணி சொந்த மண்ணில் நடக்கும் தொடர்களில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு எதிராக மொத்தம் 4 டெஸ்ட், 3 ஒருநாள், 14 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

Tags : Silly Point ...
× RELATED ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது 4 டிஎம்சி கிருஷ்ணா தண்ணீர்