×

எதிர்காலத்தில் அரசு பள்ளியில் சேர்வதற்கு சிபாரிசு தேவைப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னை வானகரத்தில் அப்போலோ மருத்துவமனையில் விபத்து, தீக்காயம், மாரடைப்பு, பக்கவாதம், மகப்பேறு போன்றவற்றிற்கு அவசர நிலையில் சிகிச்சை அளிக்க, மனித உடல் மாதிரிகளை வைத்து சிகிச்சை அளிப்பதை தெரிந்துகொள்ள மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கற்றுத்தரும் சிமுலேசன் மையம் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிமுலேசன் மையத்தை திறந்து வைத்தார். அப்போலோ மருத்துவ குழுமத் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, தமிழகத்தில் பல இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் 6 கோடியே 6 லட்சம் பேர் 18 வயதைக் கடந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தகுதியானவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளார்கள். இதுவரை 4 கோடியே 37 லட்சத்து 9,804 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 7.5 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. முதல்வரின் நடவடிக்கையால் எதிர்காலத்தில் அரசுப் பள்ளியில் சேர்வதற்கு பெரிய சிபாரிசுகள் தேவைப்படும் என்கிற நிலை ஏற்படவிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Ma Subramaniam , Will need recommendation to join government school in future: Interview with Minister Ma Subramaniam
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...