இஸ்லாம் பற்றி சர்ச்சை பேச்சு சாமியார் சிறையில் அடைப்பு

சென்னை: மதங்களைப் பற்றி தவறாக பேசும் சாமியாரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். புழல் அடுத்த புத்தகரம் பகுதியில் வசிப்பவர் சிவக்குமார்(48). இவர் ‘‘யோகா குடில்’’ என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.  இவர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு இந்துக்களின் மந்திரமான திருச்சிற்றம்பலம் என்ற மந்திரத்தை தவறாக சித்தரித்து பக்தர்கள் மத்தியில் அவதூறாக பதிவிட்டிருந்தார். இந்த அவதூறு பேச்சால் அதிர்ச்சியடைந்த  சிவாச்சாரியர்கள் தமிழகத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் சிவக்குமார் மீது புகார் அளித்தனர். பின்னர், அனைத்து சிவாச்சாரியார்களும் அப்போது புழல் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சிவகுமாரை கைது செய்து, மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

 இந்நிலையில், சிறையில் இருந்து வெளிவந்த சிவகுமார் மறுபடியும் இஸ்லாம் பற்றி அவதூறாக யூடியூப் சேனலில், கடந்த வாரம் பேசியுள்ளார். இதனையடுத்து,  யோகாகுடில் நடத்தும் சிவக்குமாரை கைது செய்யக்கோரி, புழல் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, மாதவரம் துணை ஆணையாளர் சுந்தரவதனம் சிவக்குமாரை பிடிக்க உத்தரவிட்டார். அதனையடுத்து, புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் போலீசார், உடனே புத்தகரத்தில் உள்ள யோக குடிலுக்குச் சென்று சிவகுமாரை நேற்று கைது செய்து, மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பொன்னேரி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>